DC vs KXIP : கெயில் சிறப்பாக ஆடினார். இருப்பினும் இவர் இல்லாத அணி பலவீனம் தான் தோல்வி குறித்து – அஸ்வின் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 37 பந்துகளில் 69 ரன்களையும், மந்தீப் சிங் 30 ரன்களையும் குவித்தனர். சந்தீப் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களையும், தவான் 56 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானார்.

Iyer

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : நாங்கள் தேவையான ரன்களுக்கு சற்று குறைவாக அடித்ததாக நினைக்கிறன். ஸ்பின் பவுலர்கள் இந்த மைதானத்தில் பந்துவீச கடினப்பட்டனர். கெயில் சிறப்பாக ஆடினார் அவரைத்தவிர மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். முஜீப் எங்களது அணியின் முக்கியமான வீரராவார் கடந்த ஆண்டிலிருந்து எங்களது அணிக்காக சிறப்பாக விளையாடிவருகிறார். அவரின் காயம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gayle

நாங்கள் கடைசி ஓவரில் 12-13 ரன்கள் அடித்திருந்தால் போட்டி மாறி இருக்கும். ஐயர் சிறப்பாக ஆடினார் அவருக்கு இந்த வெற்றி உரித்தாகும். ஹர்ப்ரீட் ஜுனியர் அணிக்காக நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வரும் போட்டிகளில் அவர் ஜொலிப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ளோம். அதில் சில போட்டிகளை ஜெயித்தும் மற்றும் சில போட்டிகளை தோற்றும் உள்ளோம். ஆனால், இப்போதைக்கு ஒரு நினைப்பு தான் உள்ளது நாங்கள் பிளே ஆப்-க்கு தகுதி பெருவது ஒன்றே என்று அஸ்வின் கூறினார்.

Advertisement