Ashwin : பஞ்சாப் அணியின் தொடர் தோல்விகளுக்கு இது ஒன்றே காரணம் – அஸ்வின் வேதனை

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Ashwin 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.

இதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

ABD-1

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : இந்த போட்டியில் பல இடங்களில் ஆட்டத்தை நாங்கள் தோற்றோம். டி20 போட்டிகளில் இறுக்கமான சூழ்நிலையை வென்றால் தான் போட்டியை ஜெயிக்க முடியும் அதனை கடந்த சில போட்டிகளாக நாங்கள் செய்ய தவறி உள்ளோம். இதுபோன்ற சூழ்நிலைகளில் அணியின் உள்ள வீரர்களின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். அப்போதே மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும்.

kxip

வீரர்களை நம்பி தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கினால் அவர்கள் அணிக்கு வெற்றியை பெற்று தருவார்கள். பவர்ப்பிளே ஓவர்களில் பந்துவீச்சினை நாங்கள் மேம்படுத்த வேண்டும். எங்கள் அணியின் தொடர்ச்சியான தோல்விக்கு பவர்ப்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசாதது மட்டுமே காரணம் என்று நினைக்கிறன். இந்த தவறுகளை எல்லாம் பாடமாக கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என்று அஸ்வின் கூறினார்.

Advertisement