எனது சக்ஸஸ்க்கு இதுவே காரணம். பிறந்தநாள் அன்று சிறப்பு பேட்டி அளித்த – பார்த்டே பாய் அஷ்வின்

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஷ்வின் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் பிறந்த அஸ்வின் கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. ஸ்கூல் கிரிக்கெட்டில் ஆரம்பித்து, உள்ளூர் கிரிக்கெட், மாநில கிரிக்கெட் என தொடர்ச்சியாக தனது அசாத்திய திறமையை வெளிக் கொணர்ந்த அஸ்வின் பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த இந்திய அணியில் நுழைந்து பந்துவீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சிறப்பாக செயல்பட்டார்.

ashwin india

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 150 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு முதல் அவருக்கு வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்றாலும் தற்போது வரை இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் அவர் 71 போட்டிகளில் 365 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகவேக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான சாதனையை படைத்துள்ள அஷ்வின் ஐ,பி,எல் தொடரிலும் பல்வேறு அணிகளுக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அஷ்வின் தற்போது டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். இந்நிலையில் பிறந்த நாளான இன்று அவர் தனது சக்சஸ் ரகசியம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறும்போது :

ashwin

எப்போதுமே நம்மை பலர் பார்க்கிறார்கள் என்ற ஆர்வத்தில் நான் ஒருபோதும் கிரிக்கெட் விளையாடியது கிடையாது. சர்வதேச கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி உள்ளூர் கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி அதை நான் ரசித்து விளையாடுகிறேன். ஒரு டிவிஷனல் லேவெல் கிரிகெட் ஆக இருந்தால் கூட அதை நான் மிகவும் ரசித்து விளையாடுவேன். இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தீவிர பயிற்சி செய்து கொண்டே இருப்பேன்.

- Advertisement -

ஒருவேளை மீண்டும் எனக்கான வாய்ப்பு கிடைக்கும் பொழுது என் திறனை வெளிக்காட்டுவேன் அதுவே என்னுடைய ஸ்டைல் மேலும் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த இடத்திற்கு சென்றாலும் புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பயிற்சி செய்து கொண்டே இருப்பேன். எனது தொடர்ச்சியான இந்த முயற்சிகளே எனது சக்சஸ் சீக்ரெட் என்று கூறலாம்.

Ashwin 1

அதே வேளையில் தோல்வியை தழுவும் போதும் மனம் தளராமல் கடினமாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்மை நாம் வளர்த்துக் கொள்ள தயாராக இருந்தால் அனைத்தும் சிறப்பாக முடியும் என அஷ்வின் தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பலதரப்பட்ட தரப்பில் இருந்தும் வாழ்த்து குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நீங்களும் உங்களது வாழ்த்துக்களை கமெண்ட் பாக்சில் தெரிவிக்கலாம் நண்பர்களே..!

Advertisement