இந்த 6 நாட்கள் என் வாழ்வில் மிக மோசமான நாட்கள். இப்படி நான் இருந்ததே இல்லை – வருந்திய அஷ்வின்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரருமான அஸ்வின் தற்போது இந்த வருட ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் பயணித்தார். அனைத்து அணிகளும் அங்கு சென்றடைந்து பின்னர் ஆறு நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி அவர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர்.

Ashwin

- Advertisement -

அதன் முடிவுகள் அனைத்தும் நெகட்டிவ் என வந்த பின்னர் பாதுகாப்பு வளையத்தில் வந்து அனைத்து அணிகளின் வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில நாட்கள் பயிற்சிக்கு பிறகு இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராக வேண்டும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற இரு அணிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து தற்போது பயிற்சியை தொடங்கி விட்டனர்.

சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மேலும் ஒரு வாரம் சி.எஸ்.கே அணிக்கு தனிமைப்படுத்துதல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த ஆறு நாட்களில் தான் அனுபவித்த தருணங்கள் குறித்து அஸ்வின் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Ashwin 1

கடந்த ஐந்து ஆறு மாதங்கள் நான் வீட்டில் இருந்தேன். ஆனால் ரசிகர்களுடன் சமூகவலைத்தளம் மூலம் தொடர்பில் இருந்தேன். யூடியூப் மூலம் எனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்ஸ்டாகிராமில் லைவ் சேட்கள் போன்றவற்றை செய்து வந்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் தற்போது இங்கு இருந்த ஆறு நாட்கள் எனது வாழ்க்கையில் மோசமான நேரம் ஏனென்றால் முதல் நாளில் நான் வெளியே பார்க்கும்போது துபாய் ஏறி பார்க்க முடிந்தது.

Ashwin 2

வலது பக்கம் புர்ஜ் கலிபாவை பார்க்க முடிந்தது. இது சிறப்பான இடமாக இருந்தாலும் எத்தனை நாட்கள் தான் வெளியே இருந்து பார்க்க முடியும். பொதுவாக நான் செல்போன் அதிகமாக பயன்படுத்த மாட்டேன், பார்க்கவும் மாட்டேன். ஆனால் கடந்த வாரத்தில் எனது முழு டேட்டாவும் தீர்ந்துவிட்டது. ஆறு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினேன் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement