கொரோனாவால் எனது குடும்பத்தினர் எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா ? – மனம் திறந்த அஷ்வின்

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த தொடர் ஒத்திவைக்கப்படும் முன் இந்திய வீரர்களில் முதல் நபராக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாதியிலேயே வெளியேறினார். மேலும் தனது வெளியேற்றத்திற்கு காரணம் தனது குடும்பத்துடன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறி அவர் அந்த தொடரில் இருந்து விலகினார்.

Ashwin

அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது என்ற செய்தி வெளியானது. மேலும் அஷ்வினின் மனைவி அதனை உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து : எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நாங்கள் தற்போது தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளோம் என்றும் எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனித்தனியே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பதிவிட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக அஸ்வின் பாதியிலேயே வீடு திரும்பியிருக்கிறார் என்று உறுதியான நிலையில் தற்போது தான் வீட்டிற்குத் திரும்பியதும் தனது குடும்பத்தினருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அஸ்வின் தனது பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் டெல்லி அணியில் விளையாடி கொண்டிருந்த போது எனது குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல் மற்றும் மூன்று நான்கு நாட்கள் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.

Prithi-Ashwin

என் மனைவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சில பல மருந்துகளைக் கொடுத்தும் அவர்களது காய்ச்சல் குறையவில்லை. அதன் பிறகு என்னுடைய குடும்பத்தினருக்கும் இந்த உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனது தந்தை முதல் ஐந்து நாட்கள் நன்றாகத்தான் இருந்தார். அதன் பின்னர் அவரின் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கியது. மீண்டும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கவே இல்லை.

- Advertisement -

அதன் பிறகு அவருக்கு இரு முறை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி அதன் பிறகே தற்போது அவர் நலமுடன் உள்ளார். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் எனது தந்தையை காப்பாற்ற முடிந்தது. எனவே அனைவரும் அறிகுறி இல்லை என்றாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement