
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணி சார்பாக இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தமாக 7 விக்கெட்டுகளை ரவிசந்திர அஸ்வின் கைப்பற்றினார். மேலும் இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 400வது விக்கெட்டையும் வீழ்த்தினார்.சர்வதேச அளவில் மிக வேகமாக 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற ரெக்கார்டையும் இந்திய அளவில் முதல் வீரர் என்ற ரெக்கார்டையும் இவர் இந்த போட்டியில் படைத்தார்.
இந்நிலையில் பிங்க்பால் டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு அஸ்வின் நேற்று அளித்த பேட்டியில், 400 விக்கெட்டுகள் எடுத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்திய அணி வெற்றிபெறும் போட்டி ஒன்றில் இந்த சாதனை நிகழ்த்தியது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் இன்னிங்ஸில் 145 ரன்னுக்கு நாங்கள் அவுட் ஆன பின்பு பெரிய வருத்தத்தில் இருந்தோம்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக ரன்கள் அடிக்காமல் விட்டு விட்டோமே என்று புலம்பி கொண்டும் பயந்து கொண்டும் இருந்தோம். ஆனால் இங்கிலாந்தை விட 33 ரன்கள்தான் நாங்கள் முன்னிலை பெற்று இருந்தோம். இது ஒன்றும் அட்வளவு பெரிய ஸ்கோர் கிடையாது.ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது.
ஆரம்பத்திலேயே அக்ஷர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.பின்பு நாங்கள் இருவரும் இனைந்து இங்கிலாந்தை 81க்கு ஆல் அவுட் செய்தோம். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் என்னை அணிக்குள் எடுப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. எதிர்பாராவிதமாக ஜடேஜா அப்போது காயம் அடைந்தார்.இதன் காரனமாக எனக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
அதை நான் இன்று சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்று நம்புகிறேன். இனி வரும் டெஸ்ட் தொடர்களிலும் நான் அதை சிறப்பாக செய்வேன். ஐபிஎல் போட்டிகளிலும் நான் முன்பு போல நன்றாக பவுலிங் செய்வேன், அந்த ஃபார்மை தொடர்ந்து தக்கவைத்து கொள்வது ஒரு பவுலராக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அஸ்வின் கூறினார்.