சென்னை அணிக்கு எதிராக நான் பேட்டிங்கில் வெளுத்து வாங்க இதுவே காரணம் – மனம்திறந்த அஷ்வின்

ashwin
- Advertisement -

தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரம்பகட்ட கரியரில் விளையாடி வந்தார். அதன் பின்னர் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அஷ்வின் அறிமுகமானதிலிருந்து திறமையான சுழற்பந்து வீச்சாளராக பார்க்கப்பட்டு வந்த அஸ்வின் இந்த ஆண்டு பேட்டிங்கிலும் ராஜஸ்தான் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

MS Dhoni Ravi Ashwin

- Advertisement -

குறிப்பாக ராஜஸ்தான் அணி ஆரம்பக்கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்கும்போது மூன்றாவது வீரராக களமிறங்கிய அஷ்வின் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் ரன்களை சேர்த்துக் கொடுத்தார். அதேபோன்று கடந்த 20 ஆம் தேதி சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 150 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதிகட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறுமா? என்ற நிலை இருந்தது. ஆனால் அந்தப் போட்டியில் 5 ஆவது வீரராக ஹெட்மையருக்கு முன்னரே களமிறங்கிய அஷ்வின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 23 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரி என 40 ரன்கள் அடித்து தனது அற்புதமான பேட்டிங்கால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

Ravichandran Ashwin RR .jpeg

இப்படி சென்னை அணிக்கு எதிராக வெறித்தனமான பேட்டிங் விளையாடுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது ஒரு நேர்காணலில் அஸ்வின் சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். அதோடு நான் இடம் பெற்றிருக்கும் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

இந்த வருடம் நான் களத்தில் புதுப்புது விஷயங்களை கற்று வருகிறேன். மேலும் எனது பேட்டிங்கில் பலவிஷயங்களை பயிற்சி செய்து அதனை போட்டிகளின் போது செயல்படுத்தி வருகிறேன். எனவே என்னால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடிகிறது. சிஎஸ்கே அணிக்காக பல வருடங்கள் விளையாடி இருக்கிறேன். நமது முன்னாள் அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க செய்யும்.

இதையும் படிங்க : கேப்டனாக ஏமாற்றம் ! ஐபிஎல் 2023 சீசனில் கேப்டனை மாற்றப்போகும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

அந்த வகையில் நான் சிஎஸ்கே அணிக்கு எதிராக அந்த போட்டியில் நன்றாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். இறுதியில் சிஎஸ்கே அணியை எனது பேட்டிங்கில் வீழ்த்தியது மகிழ்ச்சி என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement