- Advertisement -
ஐ.பி.எல்

மினி ஏலம் முடியும்போது கோடீஸ்வரர்களாக மாறப்போகும் 3 இளம் வீரர்கள் குறித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது நாளை டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த மினி ஏலத்தில் எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை வாங்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஒரு சில அணிகள் மட்டுமே பெரிய தொகையுடன் ஏலத்தில் பங்கேற்பதால் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு கோடிகளில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மினி ஏலத்தின் முடிவில் கோடிகளை குவிக்கப்போகும் 3 வீரர்கள் : அஷ்வின் கணிப்பு

மேலும் வெளிநாட்டு வீரர்களை தாண்டி இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒரு சில குறிப்பிட்ட இளம் வீரர்களுக்கும் கோடியில் பணம் கிடைக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சி.எஸ்.கே அணி வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவருடன் தனது யு டியூப் சேனலில் உரையாடிய அஸ்வின் இந்த மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகக்கூடிய அன் கேப்டு இந்திய வீரர்கள் குறித்து தனது விவாதத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும்.

அந்தவகையில் கார்த்திக் சர்மா மற்றும் சலீல் அரோரா ஆகியோர் இடையே கடுமையான போட்டி இருக்கும். இந்த இருவரில் யார் அதிக விலைக்கு போவார்கள்? என்று கணிப்பது கடினம். ஏனெனில் இந்த இரண்டு வீரர்களுமே நல்ல திறமையான வீரர்கள். எனவே அவர்களுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி இருக்கும். கார்த்திக் சர்மா முதலில் ஏலத்தில் வந்து விட்டால் சலீல் அரோரா அதிக விலைக்குப் போக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

அதேபோன்று சலீல் அரோராவை முதலில் ஏதாவது ஒரு அணி வாங்கினால் கார்த்திக் சர்மா மிகப்பெரிய விலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இவர்களை தாண்டி மூன்றாவதாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் துஷார் ரஹேஜா மீதும் பல அணிகளின் பார்வை இருக்கும். அவரும் மிகச் சிறப்பான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதனால் அவரும் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இம்முறை மதீஷா பதிரானா நமக்கு வேணாம்.. அவருக்கு பதிலா இவரை வாங்குங்க.. சி.எஸ்.கே வுக்கு – சீக்கா அறிவுரை

உள்நாட்டு தொடரில் விக்கெட் கீப்பர்களாக விளையாடி வரும் கார்த்திக் சர்மா, சலீல் அரோரா மற்றும் துஷாரா ரஹேஜா ஆகியோர் பேட்டிங்கிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் அடிப்படை விலையான 30 லட்சம் ரூபாயிலிருந்து கோடிகளில் செல்வார்கள் என்பதை தான் அஸ்வின் கணித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -