Ashwin : முதல் 10 ஓவர்களில் இருந்த நிலை அடுத்த 5 ஓவர்களில் மாறியது தோல்வி குறித்து – அஸ்வின் வருத்தம்

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Pollard

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Rahul 1

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

- Advertisement -

Pollard

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : அன்கிட் ராஜ்புட் முதல் ஓவரிலேயே காயம் அடைந்தது பெரிய மாற்றத்தை தந்தது. இந்த மைதானத்தில் நாங்கள் அடித்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானது தான். ஆனால், இந்த இலக்கிலேயே எதிரணியில் பவர் ஹிட்டர்கள் இருக்கும்போது சுருட்டுவது கடினம். மேலும் பனிப்பொழிவு காரணமாக பந்து வழுக்கி சென்றது. இது பந்துவீச்சாளர்களுக்கு பெரிய பலவீனம்.

Rahul

ஏனெனில் யார்க்கர் வீச நினைக்கும்போது அது புல்டாஸாக மாறுகிறது அதுவே சாம் குரான் பந்துவீசும் போது நிகழ்ந்தது. தோல்வி அடைந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசினார்கள் என்று நினைக்கிறன். குறிப்பாக ஷமி பிரமாதமாக பந்துவீசினார். ராகுல் மற்றும் கெயில் சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். அவர்களது பேட்டிங் அனைத்து போட்டிகளிலும் நன்றாக அமைந்தது. இருப்பினும், இந்த தோல்வி ஏமாற்றத்தை தந்தது என்று அஸ்வின் கூறினார்.

Advertisement