- Advertisement -
ஐ.பி.எல்

தோனியை சி.எஸ்.கே அணி இப்படித்தான் தேர்வு செய்ய வேண்டும்.. ரிடென்ஷன் முடிவு பற்றி – அஷ்வின் பேச்சு

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியிடம் தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது சிஎஸ்கே அணி தங்களது அணியை பலப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தோனியை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? :

2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே நிர்வாகம் அறிவித்துவிட்டது.

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்கள் குறித்த திட்டங்களை இறுதிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள், விமர்சகர்கள் என பலரும் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் : சிஎஸ்கே அணி தோனியை எவ்வாறு தக்க வைக்க வேண்டும்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சி.எஸ்.கே அணி தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் நான் ஒரு புதிய கோணத்தில் இந்த விஷயத்தை அணுகி இருக்கிறேன்.

- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பதிரானா, தோனி ஆகிய ஆகியவர்களை தக்க வைத்துக் கொள்வேன். குறிப்பாக தோனியை நான் அன்கேப்டு வீரராக கருதாமல் தக்கவைக்கும் ஐந்து வீரர்களின் ஒருவராகவே கருதுவேன். அது தவிர சமீர் ரிஸ்வியை ஆர்.டி.எம் கார்டு மூலம் மீண்டும் தேர்வு செய்தேன். பதிரானா சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்க கூடியவர் எனவே அவரை நேரடியாக தக்க வைக்கலாம். அதேபோன்று ருதுராஜ், ஷிவம் துபே, ஜடேஜா போன்றவர்களையும் நேரடியாக தக்கவைத்துக் கொள்வேன்.

இதையும் படிங்க : இங்க வந்தது எப்படி தெரியுமா இருக்கு? தனது சொந்த ஊரில் விளையாட இருப்பது குறித்து பேசிய – கே.எல் ராகுல்

சமீர் ரிஸ்வி சிஎஸ்கே அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். அவர் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். நிதீஷ் ரெட்டி எவ்வளவு திறமை வாய்ந்த வீரராக இருக்கிறாரோ அதேபோன்று சமீர் ரிஸ்வியும் திறமை வாய்ந்த வீரராக இருக்கிறார். எனவே என்னை பொறுத்தவரை இந்த வீரர்களை தான் நான் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்திருப்பேன் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -