
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 106 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரிலும் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 212 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா தொடரின் பாதியிலேயே ஓய்வு முடிவை அறிவித்த அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட இருக்கிறார். தற்போது 38 வயதாகும் அவர் இன்னும் ஒரு சில ஆண்டுகளே விளையாடுவார் என்பதனால் அவரது கடைசி கட்ட கரியர் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஓய்வு பெற்ற அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் அறிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடர் விளையாட இருக்கும் முன்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது கரியரில் தான் சந்தித்த கடினமான பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன், சிறந்த போட்டி என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில் :
நான் பந்துவீசியதிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் தான் என்றும் அவர் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியவர் என்றும் அவரை ஆட்டமுழக்க வைப்பது கடினம் என்றும் கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி அவர் எடுத்த விக்கெட்டிலேயே சிறந்த விக்கெட்டாக 2014-ஆம் ஆண்டு மேக்ஸ்வெல்லை ஆட்டோமிழக்க வைத்தது தான் தனது சிறந்த விக்கெட் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சூரியகுமார், சாம்சன் இந்த சின்ன டெக்னிக்கல் தவறை சரிசெஞ்சா.. ஆர்ச்சரை நொறுக்கலாம்.. ராயுடு பேட்டி
அதே போன்று தோனிக்கு அடுத்து சிறந்த கேப்டன் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித்தான் என்றும் அவர் களத்தில் எவ்வாறு போட்டியின் சூழ்நிலை கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்ற திறனை வைத்திருந்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.