சூரியகுமார், சாம்சன் இந்த சின்ன டெக்னிக்கல் தவறை சரிசெஞ்சா.. ஆர்ச்சரை நொறுக்கலாம்.. ராயுடு பேட்டி

Ambati Rayudu
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியாவை 3வது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. முன்னதாக சஞ்சு சாம்சன் சமீபத்திய போட்டிகளில் அடுத்தடுத்த சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தத் தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளில் சாம்சன் தன்னுடைய விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்தார். அதனால் ஒரு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கேப்டன் சூரியகுமாரும் இத்தொடரில் பெரிய ரன்கள் குவிக்காதது பின்னடைவை கொடுத்து வருகிறது. இந்நிலையில் அவர்களுடைய தடுமாற்றத்திற்கான காரணம் பற்றி முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

- Advertisement -

சாம்சன் – சூர்யா தடுமாற்றம்:

குறிப்பாக சாம்சனிடம் பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் சிறிய தவறை சரி செய்தால் ஆர்ச்சரை அடித்து நொறுக்கலாம் என்று ராயுடு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. ஆனால் சஞ்சு சாம்சன் அவ்வாறு அவுட்டாக தேவையில்லை. அதை சரி செய்ய ஒரு ஸ்பெல்லில் நீங்கள் விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு மற்ற பவுலர்களை அடியுங்கள்”

“கடந்தப் போட்டியின் பிட்ச்சில் வேகம், பவுன்ஸ் ஆகியவையும் பெரிதாக இல்லை. சூரியகுமாருக்கு எந்த வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீசவில்லை. அவருக்கு வேகத்தை கொடுக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அனைத்து பவுலர்களும் வருகிறார்கள். ஏனெனில் வேகத்துக்கு எதிராக சூர்யா அதிரடியாக விளையாடுகிறார். எனவே சூர்யா கொஞ்சம் நேரம் எடுத்து விளையாட வேண்டும்”

- Advertisement -

ராயுடு அட்வைஸ்:

“அடிப்படையில் கவனம் செலுத்தி கொஞ்சம் நேரத்தை செலவிட்டால் அவருக்கு ரன்கள் தாமாக வரும். சாம்சன் மனநிலையில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டெக்னிக்கல் அளவில் சிறிய தடுமாற்றம் இருக்கிறது. ஏனெனில் அவர் இழுத்து அடிக்க முயற்சிக்கிறார். அவர் நீங்கள் செய்யும் போது உங்களுடைய பின்னங்கால் லெக் ஸ்டம்ப் நோக்கி செல்லும்”

இதையும் படிங்க: 654 ரன்ஸ்.. இலங்கை புரட்டிய ஆஸி.. சச்சினை முந்திய கவாஜா சாதனை.. இங்லீஷ் 90 பந்தில் அதிரடி சாதனை

“அப்போது பந்தை ஃபுல் அடிக்க முயற்சிக்கும் போது உங்கள் கைகள் நன்றாக திறக்காது. எனவே அந்த மூவ்மெண்ட்டை விட்டு பந்து கொஞ்சம் தாமதமாக வரும் போது நீங்கள் அடிக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் கோட்டுக்குள் வந்து வேகத்தை பயன்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். மற்ற படி சஞ்சு ஷார்ட் பந்துகளை பொதுவாகவே நன்றாக அடிக்கக்கூடியவர். அவரை கோணம் மட்டுமே தடுமாற வைக்கிறது. ஷார்ட் பந்துகள் அல்ல” எனக் கூறினார்.

Advertisement