உண்மையிலேயே இந்த ஒரு விஷயத்துக்காக பங்களாதேஷ் வீரர்களை பாராட்டியே ஆகனும் – ஆட்டநாயகன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று டிசம்பர் 25-ஆம் தேதி நான்காம் நாளான இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Shreyas Iyer vs Ban

- Advertisement -

இந்த போட்டியில் முதலாவது இன்னிங்க்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணியானது 227 ரன்களை மட்டுமே குவிக்க இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி 231 ரன்களை குவித்தது.

இதனால் இந்திய அணிக்கு கடைசி இன்னிங்சில் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணையிக்கப்பட்டது. இந்த இலக்கினை எளிதாக துரத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியானது பங்களாதேஷ் அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Ashwin and Shreyas

அந்த இக்கட்டான வேளையில் 8-ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஷ்வின் ஆகியோர் மேலும் விக்கெட்டுகள் விழாமல் இந்திய அணியை தங்களது சிறப்பான பாட்னர்ஷிப் மூலம் வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 42 ரன்களையும் குவித்த அஷ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அஷ்வின் கூறுகையில் : இதற்கு மேல் எங்களிடம் பின் வரிசையில் பேட்டிங் இல்லை. எனவே போட்டியை நானும், ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக கொண்டு சென்று முடிக்க நினைத்தோம். அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடினார். இறுதியில் எங்களது பாட்னர்ஷிப் மூலம் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : அன்று சிட்னி நேற்று மெல்போர்ன் இன்று மிர்பூர் : நன்றி ஆஷ் அண்ணா – பாட்ஷா ஸ்டைலில் அஷ்வினுக்கு நன்றி சொல்லும் இந்திய ரசிகர்கள்

இந்த போட்டியில் பங்களாதேஷ் வீரர்களை பாராட்டியே ஆகவேண்டும். ஏனெனில் அவர்கள் பந்துவீசிய விதம் மற்றும் லென்த் என அனைத்துமே அருமையாக இருந்தது. அவர்களது பந்துவீச்சு எங்களுக்கு அழுத்தத்தை அளித்தது. அந்தவகையில் சிறப்பாக பந்துவீசிய பங்களாதேஷ் வீரர்களை பாராட்டியே ஆகவேண்டும். உண்மையிலேயே எங்களுக்கு அவர்களது பந்துவீச்சின் மூலம் பயத்தை காட்டினர் என அஷ்வின் பங்களாதேஷ் வீரர்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement