ஆயுஷ் மாத்ரே விடயத்தில் சி.எஸ்.கே செய்தது மிகப்பெரிய தவறு.. அந்த பையன் பாவம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin and Ayush Mhatre
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் இறுதிவரை போராடி 184 ரன்கள் மட்டுமே குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணியானது நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் சென்னை சிறப்பான துவக்கம் கொண்டும் இறுதியில் வெற்றியடையாமல் போனது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆயுஷ் மாத்ரே விடயத்தில் சி.எஸ்.கே நிர்வாகத்தை சாடிய : ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடிய ஆயுஷ் மாத்ரே 13 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத அவர் இம்பேக்ட் வீரராகவே காயத்துடன் வந்து விளையாடி இருந்தது இந்த போட்டியின் போது தெரியவந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடியது குறித்து சி.எஸ்.கே அணியின் நிர்வாகத்தை சாடும் வகையில் சில கருத்துக்களை முன்னாள் சி.எஸ்.கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் பேசியதாவது : ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே முழங்காலில் கட்டுடன் தான் வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் அவர் கடந்த சில போட்டிகளாகவே பீல்டிங் செய்யவே இல்லை. வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்தால் அதனை உடனடியாக கண்காணித்து சரி செய்ய வேண்டும் அதுதான் இஞ்சூரி மேனேஜ்மென்ட்டின் வேலை. ஆனால் இந்த போட்டியில் ஆயுஷ் மாத்ரே களத்தில் நொண்டிய படி இருக்கிறார். பிசியோதெரபிஸ்டும் வந்து பார்க்கிறார்கள். அதன்பிறகும் அவரை விளையாட வைத்து ரன் ஓட வைக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா

இப்படி அவர் விளையாடினால் அவரது காயம் பெரியதாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஆறு வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாமல் கூட போகலாம். எனவே வீரர்களை இவ்வளவு அலட்சியமாக கையாளக்கூடாது என சி.எஸ்.கே நிர்வாகத்தை சாடி ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement