மும்பை வீரரை நான் மான்கட் முறையில் அவுட் ஆக்க சொல்லியும் எங்கள் அணி வீரர் செய்யவில்லை – அஷ்வின் ஓபன்டாக்

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சில ஆண்டுகள் கேப்டனாகவும் சில ஆண்டுகள் செயல்பட்டு இருக்கிறார். அப்படி தான் கேப்டனாக இருந்தபோது 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றினை இணையதளத்தின் வாயிலாக அவர் பகிர்ந்து கொண்டார்.

ashwin

- Advertisement -

அஸ்வின் கேப்டனாக இருந்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான ஜாஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தபோது அந்த விவகாரம் அப்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் பல கிரிக்கெட் விமர்சகர்கள் மான்கட் முறையில் பட்லரை அவுட் செய்வது கிரிக்கெட்டுக்கு அழகு கிடையாது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முரளி கார்த்திக் உடனான யூடியூப் நிகழ்ச்சியின்போது மான்கட் முறையில் நடைபெற்ற சில சம்பவங்களை அஸ்வின் பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நான் ஜாஸ் பட்லரை மான்கட் முறையில் ரன் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அது என்னைப் பொறுத்தவரை சரியான ஒரு விக்கெட் தான். அதற்கு அடுத்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது. அப்போது கடைசி விக்கெட்டாக ராகுல் சாகர் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர்.

rajpoot

நான் கேப்டனாக இருந்த அந்த போட்டியில் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. அப்போது அந்த கடைசி ஓவர் வீசி வந்த அங்கித் ராஜ்புட்டிடம் சென்று நீ பந்துவீசும் முன் பேட்ஸ்மேன்கள் ரன் ஓட நினைப்பார்கள். எனவே நீ கடைசி பந்து வீசுவதற்கு முன்பு ஓடி வந்து நின்று மான்கட் முறையில் வீரரை அவுட் செய்யலாம் என்று நான் கூறினேன். உடனே அதிர்ச்சியடைந்த ராஜ்புட் என்னை பார்த்து நான் இதை செய்ய மாட்டேன் என்று கூறினார்.

rajpoot 1

மேலும் நான் நிச்சயம் அதை செய்தால் என் மீது சர்ச்சைகள் எழுந்து நான் வில்லனாக மாற விரும்பவில்லை என்று ராஜ்புட் என்னிடம் கூறினார். ஆனால் நான் அதற்கு நீங்கள் எது செய்ய இருக்கிறீர்களோ அது சரியான ஒன்றுதான். ரன் ஓட நினைக்கும் பேட்ஸ்மேன் மீதுதான் தவறே தவிர நீங்கள் செய்வது தவறு கிடையாது என்று நான் கூறினேன். ஆனாலும் ராஜ்புட் அதை செய்யவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement