இரண்டு மேட்ச் விளையாடலனாலும் டெஸ்ட் ரேங்கிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி மூன்று வகையான கிரிக்கெட்க்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ind

- Advertisement -

இந்த தரவரிசை பட்டியலில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் எந்தவித மாற்றமும் இன்றி 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் இங்கிலாந்து தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இடம்பெறாத ரவிச்சந்திரன் அஸ்வின் 848 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து 2 ஆவது இடத்தில் நீடிக்கும் அளவிற்கு ஏற்கனவே சிறப்பான ஆட்டத்தை அஷ்வின் வெளிப்படுத்தியுள்ளார். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி உள்ளார்.

இந்த பட்டியலில் 10வது இடத்தில் பும்ராவும் உள்ளார். 10 பேர் கொண்ட இந்த தர வரிசை பட்டியலில் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவரும் அஸ்வின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement