- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விஜய் குறித்து அஜித் ரசிகர்கள் செய்த ட்ரென்டால் கடுப்பான அஷ்வின் -கோவமாக என்ன சொல்லி இருக்கார் பாருங்க

சமூக வலைதளங்களில் அவ்வப்போது விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மோதிக்கொள்வது சகஜமான விஷயம்தான். அதனைப் போன்று தற்போது ஆகஸ்ட் 8 பாடைகட்டு என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.ஏனெனில் ஆகஸ்ட் 8ம் தேதி அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகிறது.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகி RIPactorVIJAY என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கினார்கள். இந்த சண்டை குறித்து தமிழக வீரர் அஸ்வின் ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் ஒரு கல் நமது கிரகத்தை தாக்கியது அதனால் வழக்கத்துக்கு மாறாக பருவநிலை வேறுபட்டு காரணமாக பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவுகிறது. ஆனால் நமது அழகிய தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் RIP விஜய் என்பதை சமூக அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

இதில் அஸ்வின் தெளிவுபடுத்த விரும்பு அது யாதெனில் உலகில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன அது குறித்து நல்ல பதிவினை படித்து அதனை பகிரலாம் அதைவிடுத்து நடிகர்கள் பற்றி தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
Published by