எனக்கும் 2 பெண் குழந்தை இருக்கு. பத்ம சேஷாத்ரி ஆசிரியரை வெளுத்து வாங்கிய அஷ்வின் – காட்டமான கருத்து

PSBB

கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் அதிக அளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தியாக பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியரின் பாலியல் தொல்லை பிரச்சனை மாறியுள்ளது. சென்னையை சேர்ந்த அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு பாடம் எடுத்தது மட்டுமின்றி மாணவிகளின் மொபைல் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம் தகாத மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.

psbb 1

இது தொடர்பாக மாணவிகள் சிலர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரியரின் இந்த மோசமான செயல் சமூகவலைதளத்தில் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் அந்த பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசிரியரின் இந்த செயல்பாட்டிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் :

கடந்த இரண்டு தினங்களாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அந்தப் பள்ளியின் பழைய மாணவனாக மட்டும் அல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன் ஆக இருக்கும் என்னால் இந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. தற்போது ராஜகோபாலன் என்ற ஒரு பெயர் மட்டுமே வெளியாகி உள்ளது. ஆனால் இது போன்று எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டு.ம் இது போன்ற கொடிய செயல்களை செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்க கடுமையான சட்டங்கள் தேவை என தனது காட்டமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -
Advertisement