வீரேந்தர் சேவாக்கின் மாபெரும் சாதனையை முறியடித்த ஹிட் மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit Sharma and Sehwag
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களுக்கு சுருண்டது.

வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா :

பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் 110 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

அதே வேளையில் மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 69 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி, 3 சிக்சர் என 79 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அடித்த 79 ரன்கள் மூலம் இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கின் மாபெரும் சாதனை ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முறியடித்து முதலிடத்திற்கு சென்றுள்ளார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் துவக்க வீரராக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்களை அடித்த வீரராக வீரேந்திர சேவாக் முதலிடத்தில் இருந்தார். வீரேந்தர் சேவாக் இந்திய அணியின் துவக்க வீரராக மட்டும் 16,119 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் கிரிஸ் கெயிலின் வரலாற்று சாதனையை முறியடித்த கைரன் பொல்லார்டு – விவரம் இதோ

இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 79 ரன்கள் அடித்த ரோகித் சர்மா தற்போது இந்திய அணியின் துவக்க வீரராக சர்வதேச போட்டிகளில் 16,137 ரன்களை அடித்து வீரேந்திர சேவாக்கை தாண்டி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இவர்கள் இருவருக்கு அடுத்து சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்திலும், சுனில் கவாஸ்கர் நான்காவது இடத்திலும், ஷிகர் தவான் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement