இந்திய அணியின் இடதுகை தோனி அவர்தான்.. இளம் வீரரை பாராட்டிய – தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சில ஆண்டுகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்த ரிங்கு சிங் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு வகையான போட்டிகளிலும் அறிமுகமானார். அப்படி தான் அறிமுகமான போட்டிகளில் இருந்து தற்போது வரை ரிங்கு சிங் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக இந்திய அணியின் எதிர்கால பினிஷராகவும் பார்க்கப்படுகிறார். நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடறில் கூட அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்த ரிங்கு சிங் ரோஹித் சர்மாவுடன் இணைந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பையும் அமைத்திருந்தார்.

- Advertisement -

இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்து வரும் ரிங்கு சிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக வீரமான ரவிச்சந்திரன் அஸ்வின் ரிங்கு சிங் குறித்து பேசுகையில் கூறியதாவது :

ரிங்கு சிங்கை நான் இடதுகை தோனி என்று அழைப்பேன். தோனியுடன் அவரை ஒப்பிட்டு பேச முடியாது தான். தோனி ஒரு ஜாம்பவான் ஆனால் தோனியை போன்ற திறமை ரிங்கு சிங்கிடம் உள்ளது என்பதே எனது கருத்து. ஏனெனில் ஓரிரு போட்டிகளில் இல்லாமல் அவர் தொடர்ச்சியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக உள்ளூர் போட்டி, ஐபிஎல் போட்டி மற்றும் சர்வதேச போட்டி என எந்த இடத்தில் அவர் விளையாடினாலும் தனது பங்களிப்பை சரியாக செய்து வருகிறார். கொல்கத்தா அணிக்காக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னதாக அவருக்கு வலைப்பயிற்ச்சியில் கூட பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது என்று கேள்விப்பட்டிருப்பேன்.

இதையும் படிங்க : இந்த தலைமுறையின் மொத்த வீரர்களையும்.. ஃபிட்டாக மாற்றியவரே கிங் கோலி தான்.. முன்னாள் வீரர் பாராட்டு

ஆனால் தற்போது அந்த தடைகளை எல்லாம் உடைத்து அவரது நிலையை மாற்றி உள்ளார். இன்னும் ரிங்கு சிங் கிரிக்கெட்டில் பெரிய இடத்திற்கு வருவார் என்றும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 356 ரன்களை 176.2 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement