பாகிஸ்தான் அணியில் எனக்கு பிடித்த 3 பேவரைட் வீரர்கள் இவர்கள் தான் – தமிழக வீரர் அஷ்வின் வெளிப்படை

Ashwin
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு இந்த 2021 ஆம் ஆண்டு ஒரு அமோகமான ஆண்டாக அமைந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த ஆண்டு முழுவதுமே நம்பமுடியாத அளவில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் இரண்டாம் கட்ட அணியுடன் பயணித்த பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் எவ்வாறு செயல்படப்டுகிறதோ என்று அனைவரும் யோசித்த வேளையில் அனுபவம் பிளஸ் இளமை ஆகியவற்றை கலந்து பாகிஸ்தான் அணி கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி வரை சென்றது.

shaheen-afridi

- Advertisement -

பயிற்சியாளர் பதவி விலகல், உலககோப்பை அணி தேர்வில் சர்ச்சை, சரியாக திட்டமிடப்படாத போட்டிகள் என பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் அணி இந்த வருடத்தை சிறப்பாக நிறைவு செய்ய இருக்கிறது. அதிலும் டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பாகிஸ்தான் அணி நம்பமுடியாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வரும் தமிழக வீரர் அஷ்வின் தற்போதைய பாகிஸ்தான் அணியில் தனக்கு பிடித்த மூன்று பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்து அவர்கள் குறித்து பேசியுள்ளார். அவர் தேர்வு செய்த மூன்று பாகிஸ்தான் வீரர்கள் யாரெனில் பாபர் அசாம், ரிஸ்வான் மற்றும் ஷாகின் அப்ரிடி தான். இதுகுறித்து அவர் கூறுகையில் :

rizwan

நான் முஹம்மது ரிஸ்வான் விளையாடும் போட்டிகளை தொடர்ச்சியாக ஃபாலோ செய்து வருகிறேன். அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மற்றவர்களை பேச வைக்கிறார். பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அவருக்கு தற்போது அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் நற்பெயர் கிடைத்துள்ளது. அதேபோன்று பாபர் அசாமையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் ஆஸ்திரேலியாவில் அவர் அடித்த சதம் அற்புதமானது.
அதுமட்டுமின்றி அவர் தற்போது விளையாடிவரும் விதம் என அனைத்துமே மிக சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஷஸ் டெஸ்ட் : இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட பரிதாபம் – அதுக்குன்னு இப்படியா?

இறுதியில் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி குறித்து பேசிய அவர் : உண்மையிலேயே சிறப்பான திறமையுள்ள வீரர் ஷாகின் அப்ரிடி. அவரை போன்ற பல திறமையான வீரர்கள் தற்போது பாகிஸ்தான் அணிக்காக தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றனர். சரியான நேரத்தில் பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரராக இளம்வயதிலேயே ஷாஹீன் அப்ரிடி வளர்ந்து நிற்கிறார் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement