நேற்றைய போட்டியில் ஒரு சமயத்தில் 23 பந்துக்கு 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த டெல்லி அணி 8 ரன்களுக்கு 7 விக்கெட்டை வீழ்த்தியது. இதனால் டெல்லி அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் மோரிஸின் விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மோரிசை பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தனது அபார த்ரோவின் மூலம் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். இதோ அந்த வீடியோ :
Ash's one-handed bullet run-out https://t.co/cCQlt5R1cH via @ipl
— Siva.k (@sivakubendiran) April 2, 2019
நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.
அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.



