பஞ்சாப் அணியில் கழட்டிவிடப்படும் அஷ்வின். புதிய கேப்டனாகும் இளம் வீரர் – விவரம் இதோ

raviashwin

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.பி.எல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இருந்தே ஐபிஎல் அணிகள் தங்கள் அணி வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Ashwin

அதன்படி தற்போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். ஆனால் தற்போது அவர் டெல்லி அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவியது. இதனை டெல்லி அணி நிர்வாகம் தற்போது உறுதி செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி அதிகாரி ஒருவர் கூறுகையில் : டெல்லி அணிக்கு அஸ்வின் வரை இருப்பது உண்மைதான். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

இதுகுறித்து டெல்லி அணி பொறுப்பாளர் கும்ப்ளே கூறுகையில் : அஷ்வின் தற்போதுதான் அணியில் இணைந்துள்ளார். படிப்படியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் அஸ்வின் குறித்த உறுதியான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அஸ்வின் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் பாதியில் சிறப்பாகவும், இரண்டாவது பாதியில் படு சொதப்பலாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rahul

2018 ஆம் ஆண்டில் ஏழாம் இடத்தை பிடித்த பஞ்சாப் அணி, 2019 ஆறாம் இடத்துடன் தொடரை முடித்தது. இந்நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து அஷ்வின் விலகியதால் அந்த அணிக்கு இந்திய அணியின் இளம் வீரரான கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -