அஸ்வின் மீது கடும் கோவத்தில் கோலி.! காரணம் இதுதான்.!

kohli-ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு, விராட் கோலியின் அபாரமான சதம் என்று இருந்தும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தால் படு தோல்வியடைந்தது. அதே போல இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ashwin 2

இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும், அஸ்வினுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி போதிய வாய்ப்பை அளிக்க மறுக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு 38 ஓவர்கள் வரை பந்து வீச கோலி வாய்ப்பு தராமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் கூட அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கபடவில்லை. ஆனால், அவரை விட அனுபவத்தில் குறைந்த குல்தீப் யாதாவிற்கு தான் வாய்ப்பளிக்கபட்டிருந்தது. இதனால் அஸ்வினிற்கு வேண்டுமென்றே கோலி பந்து வீசும் வாய்ப்பை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ashwin

அதே போல இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பர்மிங்ஹாமில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வினிற்கு இடையில் சில மணி நேரம் ஓவர்கள் அளிக்கப்படவில்லை என்று ஏற்கனவே ஒரு குற்றசாட்டு எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.