பஞ்சாப் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அஷ்வின். இப்போ எந்த அணியில் இணைகிறார் பாருங்க

Ashwin

இந்திய அணியின் முன்னணி வீரரும் தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Ashwin

மொத்தம் 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் இதுவரை 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தாலும் அந்த அணி இரண்டு முறையும் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதனால் அந்த அணி தற்போது அஸ்வினை கழற்றிவிட முடிவு செய்தது. இதனையடுத்து தற்போது அஸ்வின் பஞ்சாப் அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாறி உள்ளார். தற்போது பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக கே.எல் ராகுலை நியமிக்க அந்த அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

ashwin

மேலும் அஸ்வினை விடுவித்த அந்த அணி மற்ற வீரர்களை வாங்க ஆர்வம் காட்ட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வினை தற்போது டெல்லி அணி ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கேடு இந்த மாதம் 14 ஆம் தேதியோடு முடிவடைவதால் பல வீரர்கள் அணி மாறுவார்கள் என்று கருதப்படுகிறது.

- Advertisement -