அஸ்வின் உட்பட 3 வீரர்களை அணியில் இருந்து நீக்கிய அணியின் நிர்வாகம் – அப்போ இந்த வருஷம் விளையாட முடியாதா ?

ashwin
- Advertisement -

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கிலாந்தில் ஜூலை 1-ம் தேதி வரை அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தக்கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான குறுகிய ஓவர்கள் கொண்ட தொடர் ஆசிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ashwin india

- Advertisement -

மேலும், இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் மாற்றம் வந்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதி துவங்கி இருக்க வேண்டிய இந்த தொடர்கள் தற்போது வரை துவங்க வில்லை. இந்த வருடம் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான். அதனைத் தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்களும் இந்த தொடரில் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடர் ஒத்திவைக்கப் பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் சிலரும் தங்களது வெளிநாட்டு ஒப்பந்தத்தை இழக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருக்கும் பலவீரர்கள் இங்கிலாந்து கவுண்டி அணியில் இடம்பிடித்து ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகின்றனர்.

Ishanth

அதில் குறிப்பாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, ஹனுமா விஹரி போன்ற வீரர்களை இங்கிலாந்தின் பல்வேறு உள்ளூர் அணிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் யார்க்ஷயர் கவுண்டி அணி அஷ்வின், கேசவ் மஹராஜ், நிக்கோலஸ் பூரன் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்களில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

வைரஸ் பாதிப்பை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்று வீரர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்த கவுன்டி அணி அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் கவுண்டி தொடரில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement