இப்படி மேட்ச் பாத்து ரொம்ப வருஷம் ஆகுது. எனக்கு பழைய நியாபகலாம் வருது – அஷ்வின் போட்ட சூப்பர் பதிவு

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி ஜூலை 22ஆம் தேதி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 308 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 305 ரன்கள் மட்டுமே அடித்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றது.

இதன் வெற்றியின் காரணமாக இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி அதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் குறித்தும் இந்திய அணி விளையாடிய விதம் குறித்தும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் மூலம் பதிவிட்டு வரும் வேளையில் இந்திய அணியில் நட்சத்திர வீரரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த சேனலில் மீண்டும் கிரிக்கெட்டை பார்ப்பது எனக்கு பழைய ஞாபகங்களை கொண்டு வருகிறது. குட்லக் சுப்மன் கில் அண்ட் டீம் இந்தியா என அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவர் பதிவிட்ட இந்த பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த அஸ்வின் தற்போது இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் அணியில் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க : IND vs WI : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – அணியில் ஒரு மாற்றம்

இருந்தாலும் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement