முரளிதரனின் மிகப்பெரிய உலக சாதனையை சமன் செய்ய இருக்கும் அஸ்வின் – சாதனை விவரம் இதோ

Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய பந்து வீச்சாளர்கள் செயல்பாட்டில் அஸ்வினை அடித்துக்கொள்ள ஆளில்லை என்றே கூறலாம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 11 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கிலும் 4 சதங்களை அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்துள்ளார்.

ashwin bat

- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதையும் அவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்கேற்று இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்வார்.

இந்த சாதனையை இதுவரை வைத்திருக்கும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் உடன் அஷ்வின் சமன் செய்து கொள்வார். இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 342 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ashwin india

இன்று ஒருவேளை அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்து அவர் இந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தினால் இலங்கை ஜாம்பவான் முரளிதரனுடன் இந்த சாதனையை பகிர்ந்துகொள்வது மட்டுமின்றி, இந்திய வீரராகவும் தனிப்பட்ட சாதனையை படைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement