டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியை எச்சரித்த – தமிழக வீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பை பெறாத நிலையில் தற்போது மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்க்கு உயிர்ப்பு கொடுக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு தற்போது இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நுழைந்து விடும்.

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது அனைவரது மத்தியிலும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடி வருவது அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட் போன்றே தற்போது இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வருகிறது.

ENG Test

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பிறகு அந்த அணி அதிரடியான பல வெற்றிகளை பெற்று இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடியை சமாளிக்க முடியாமல் எதிரணிகள் முடங்கி வரும் வேளையில் இந்த அணுகுமுறையானது மிகவும் தவறான ஒன்று இதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்யக்கூடாது என்று அஸ்வின் தனது வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் செய்வதை அப்படியே டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்துவிட முடியாது. ஆனால் தற்போது இங்கிலாந்து வீரர்கள் அந்த நடைமுறையில் தான் விளையாடி வருகின்றனர். குறிப்பிட்ட சில ஆடுகளங்களில் நீங்கள் இதேபோன்று அதிரடியாக விளையாட முயற்சித்தால் நிச்சயம் உங்களது அணி அப்படியே நிலை குலையும். குறிப்பாக இந்தியா போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நீங்கள் விளையாடினால் மைதானங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லை என்றால் நிச்சயம் உங்கள் அணி பெரிய சரிவை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணி செய்த இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம் – கிரேக் சேப்பல் குற்றசாட்டு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ஒருமுறை நான் டபுள்யூ ராமனிடம் பேசும் போது : ஹலோ மிஸ்டர் எப்போதும் பிட்ச்களுக்கு சவால் கொடுத்து பார்க்க வேண்டும். நீச்சல் குளத்தில் நீந்துவது போல கடலில் நீந்த முடியாது என்று கூறியிருந்தார். அதனை நான் இங்கிலாந்து அணிக்கு கூற விரும்புகிறேன். நிச்சயம் உங்களால் இதே அணுகுமுறையை தொடர்ந்து செயல்படுத்த முடியாது அது தவறான ஒன்று என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement