ஒழுங்கா உள்ள நில்லு.. இல்லனா அவுட் பண்ணிடுவேன்.. தெ.ஆ வீரருக்கு வார்னிங் குடுத்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 245 ரன்கள் குவித்தது. பின்னர் தங்களது முதலில் இன்னிங்ஸ்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தையும் மிகச் சிறப்பாக துவங்கிய தென்னாப்பிரிக்க அணியானது பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரரான டீன் எல்கர் 185 ரன்களையும், மார்க்கோ யான்சன் 84 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 408 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 19 ஓவர்களை வீசி 49 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது அஸ்வின் தென்னாப்பிரிக்க வீரரான மார்கோ யான்சனை மான்கட் செய்ய முயன்றது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது :

இதையும் படிங்க : 8 வருடங்களுக்கு பின் நேர்ந்த பரிதாபம்.. ரோஹித்துக்கு எதிராக ரபாடா மிரட்டலான சாதனை.. திணறும் இந்தியா

கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மார்க்கோ யான்சன் ஸ்ட்ரைக் வேண்டும் என்பதற்காக எதிரில் இருக்கும் வீரர் பந்தை அடிப்பதற்குள்ளே கிரீசை விட்டு தொடர்ந்து தாண்டி வந்தார். இதை கவனித்த அஸ்வின் அவருக்கு மான்கெட் எச்சரிக்கையை விடுத்து உள்ளே நிற்கும்படி கூறினார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பட்லரை மான்கட் செய்திருந்த அஸ்வின் பலமுறை இதேபோன்று வீரர்களுக்கு மான்கட் எச்சரிக்கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement