வீடியோ : கவுன்டி கிரிக்கெட்டில் 21 வயது இளம்வீரரை அலறவிட்ட அஷ்வினின் மாயாஜால பந்து – க்ளீன் போல்ட்

ashwin

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியா இங்கிலாந்து மோதவிருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதன்மை தேர்வாக இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வாக இருக்க கூடாது என்று முடிவுசெய்துள்ளார்.

ashwin 2

இதனால் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி சார்பாக விளையாட முடிவு செய்து ஜூலை 11ஆம் தேதி துவங்கிய போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதுபோன்று கவுன்டி போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு அது உதவும் என்ற காரணத்தினாலேயே தற்போது அந்த டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை 21 வயதான வீரர் கணிக்க முடியாமல் போல்டாகி வெளியேறினார். பந்து வெளியே போகிறது என்று நினைத்து பந்தினை அடிக்காமல் விட்ட பேட்ஸ்மென் உள்ளே வந்து ஸ்டம்பை அடிக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் தான் ஆட்டம் இழந்து விட்டோம் என்பதை நம்ப முடியாமல் அவர் 42 ரன்களுக்கு வெளியேறினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் அஷ்வின் முதல் ஓவரை வீசியதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 11 ஆண்டு கழித்து சாதனை ஒன்றினையும் படைத்துள்ளார். அதன்படி இதற்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்து வீச்சாளர் முதல் ஓவரை வீசியது 2010 ஆம் ஆண்டுதான். அதன்பிறகு தற்போது 11 ஆண்டுகள் கழித்து அஷ்வின் முதல் ஓவரை வீசியுள்ளார்.

Advertisement