கிண்டல் செய்த கவுண்டி அணியையே திரும்ப வாயை பிளக்க வைத்த அஷ்வின் – தரமான சம்பவம்

ashwin

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக இடம்பெற்றிருக்கும் தற்போது ஓய்வு நேரத்திலும் இங்கிலாந்து உள்ளூர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

ashwin

ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கு முன்னர் சரியான பயிற்சி வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணியுடன் இணைந்து தற்போது உள்ளூர் தொடரில் விளையாடி வருகிறார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் நடந்த சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ஓவர்களை வீசி 99 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இதன் காரணமாக அஸ்வினின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்த சர்ரே அணி அவரது படத்திற்கு கீழ் சிரிக்கும் இமேஜை போட்டு கிண்டலடித்து இருந்தது.

ashwin 1

இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்சில் அவர் மீது இருந்த கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஸ்வின் 15 ஓவர்கள் மட்டுமே வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 6 விக்கெட்டுகளை வீழ்த்த அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

ashwin 2

கிண்டல் செய்த அதே அணியை மீண்டும் வாயைப் பிளக்க வைத்து தனது பந்துவீச்சை மூலம் அசத்தியுள்ளார் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னர் 6 முறை கவுண்டி போட்டிகளில் அவர் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement