வார்னே மற்றும் கும்ப்ளேவை தாண்டி 2 ஆவது வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – தமிழகவீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இது அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே நிச்சயம் அஸ்வின் 500 விக்கெட்டுகளை எட்டி விடுவார் என்ற பேச்சு அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது.

அதோடு முன்கூட்டியே அவரது இந்த சாதனைக்காக பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும் அதிகளவில் இருந்து வந்தன. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தவிர்த்து இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜாக் க்ராவிலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்தார்.

அவரது இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்த 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மேலும் சில சாதனைகளையும் அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் (108 போட்டிகள்), அணில் கும்ப்ளே (105 போட்டிகள்) ஆகியோரை முந்திய அஸ்வின் முரளிதரனுக்கு அடுத்து அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

உலக அளவில் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : அவரை எப்படி வர்ணனை பெட்டியில் பேச விடலாம்? சர்பராஸ் கான் தந்தைக்கு எதிரான விமர்சனம் – நிர்வாகிகள் அளித்த பதில்

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், வால்ஷ் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement