இப்போதான் கேரியர ஸ்டார்ட் பண்ணாரு அதுக்குள்ள அவருக்கு இப்படி ஒரு நிலையா ? – அஷ்வின் பரிதாபம்

Robinson

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுக வீரராக களமிறங்கிய 27 வயது வீரரான ஒலி ராபின்சன் தனது அறிமுக போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ollie robinson 2

இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்து மட்டுமின்றி பேட்டிங்கிலும் 42 ரன்கள் குவித்து சிறப்பான தனது ஆல்ரவுண்ட் பர்பார்மென்ஸை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக இனி அவர் சிறப்பான வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாலியல் ரீதியாகவும், இனவெறியை தூண்டும் ரீதியாகவும் அவர் பதிவிட்ட சில ட்வீட்டுகள் இணையத்தில் வைரலாகியது.

- Advertisement -

இதன்காரணமாக அவர் தற்போது முதல் போட்டி முடிந்தவுடனேயே இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு சுமார் ஏழு மாதகாலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடை விதித்துள்ளது. தனது இந்த செயலுக்கு ஒலி ராபின்சன் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்த போதிலும் அவருக்கு இங்கிலாந்து நிர்வாகம் தண்டனை அளித்துள்ளது.

Robinson

இந்நிலையில் அவரின் இந்த பரிதாப நிலையை கண்ட இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இட்ட பதிவுகளுகாக இப்போது அவருக்கு தடை செய்யப்பட்டு இருக்கிறார். உண்மையாகவே நான் அவருக்காக வருத்தப்படுகிறேன்.

- Advertisement -

ஒரு அறிமுக வீரராக முதல் டெஸ்டில் அடி எடுத்து வைத்து சிறப்பான தொடக்கத்தை அவர் தந்துள்ளார் ஆனால் இந்தத் தடையின் மூலம் அவர் விளையாட முடியாமல் போனது எனக்கு வருத்தம் என்றும் சமூக வலைதளத்தின் கைகளில் வீரர்களின் எதிர்காலம் உள்ளதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement