போட்டி துவங்கிய முதல் ஓவரிலேயே சாதித்து காட்டிய அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

Ashwin

- Advertisement -

முதல் இன்னிங்சில் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின் மேலும் 27 வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைசி நாளான இன்று இரண்டாவது இன்னிங்சில் தற்போது அஸ்வின் ஒரு புதிய உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

அது யாதெனில் இன்று போட்டி துவங்கிய முதல் ஓவரிலேயே அஸ்வின் தென்னாப்பிரிக்க வீரரை போல்ட் செய்து தனது 350 வது டெஸ்ட் கிரிக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் முரளிதரனின் 350 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை தற்போது 66 போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சமன் செய்துள்ளார்.

Ashwin 1

மேலும் தற்போது தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது மீதமிருக்கும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement