இந்த வெற்றியும், ஆட்டநாயகன் விருதும் இவர்களுக்கே சமர்ப்பணம் – நெகிழவைத்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 329 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 134 ரன்களை மட்டுமே குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் சதம் மூலமாக இந்திய அணி 286 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடி 318 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ashwin 2

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தது மட்டுமின்றி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றார். பின்னர் போட்டிக்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் :

சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருமுறையாவது விளையாடிவிட மாட்டோமா ? என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களுக்கு மத்தியில் எனக்கும் கை தட்டுகள் கிடைக்கின்றன. நான் இந்த மைதானத்தில் 8-9 வயதில் இருந்து விளையாடி வருகிறேன். இந்த மைதானத்தில் பல போட்டிகளை என் அப்பாவுடன் வந்து பார்த்து இருக்கிறேன் என்று கூறினார்.

Ashwin

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இப்போது என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை வார்த்தைகள் வரவில்லை. சென்னையில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த டெஸ்ட் போட்டி தான் என் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டியாக கருதுகிறேன். இன்றைய நாள் நான் ஒரு ஹீரோவைப் போல உணர்கிறேன்.

Ashwin 1

கொரோனா காலத்திலும் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடக்காமல் இருந்த வேளையில் சென்னை ரசிகர்கள் தற்போது பெரும் திரளாக வந்து இந்த போட்டியை ரசித்து இருக்கிறார்கள். இந்த வெற்றியையும் எனது ஆட்டநாயகன் விருதையும் சென்னை ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று அஸ்வின் நெகிழ்ச்சியுடன் பேசி ரசிகர்களை நெகிழ வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement