Ashwin : பஞ்சாபி முறையில் அசத்தலாக நடனமாடிய ரவிச்சந்திரன் அஸ்வின்

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான்

Ashwin
- Advertisement -

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தனர். அப்போது பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் சென்னை குத்து டான்ஸ் உடன் பஞ்சாபி ஸ்டைலில் ஆடி அசத்தினார். ஆனால், இந்த வீடியோவை ரசிகர்கள் கலாய்த்த வண்ணமும் உள்ளனர். ஒண்ணு பஞ்சாபி ஸ்டைலில் ஆடு இல்லை சென்னை ஸ்டைலில் ஆடு என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 52 ரன்களும், மில்லர் 27 பந்துகளில் 40 ரன்களையும் அடித்தனர். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திரிபாதி 50 ரன்களும், பின்னி 11 பந்துகளில் 33 ரன்களையும் அடித்தனர். சிறப்பாக விளையாடிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Advertisement