இங்கிலாந்து கவுண்டி அணிக்காக விளையாடி வரும் அஷ்வின் – சர்ரே அணி கொடுத்த மரியாதையை பாத்தீங்களா ?

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியா இங்கிலாந்து மோதவிருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதன்மை தேர்வாக இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வாக இருக்க கூடாது என்று முடிவுசெய்துள்ளார்.

ashwin 2

- Advertisement -

இதனால் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி சார்பாக விளையாட முடிவு செய்து நேற்று 11ஆம் தேதி துவங்கிய போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதுபோன்று கவுன்டி போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு அது உதவும் என்ற காரணத்தினாலேயே தற்போது அந்த டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.

இந்த விடயத்தில் அஸ்வின் விளையாடுவது சிறப்பான விஷயம் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் இங்கிலாந்து மண்ணில் கவுண்டி அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். ஆனால் இந்த போட்டியில் சர்ரே அணி அஸ்வினுக்கு கொடுத்த மரியாதை தான் தற்போது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ashwin 1

ஏனெனில் இங்கிலாந்து மைதானங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் எப்போதும் முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இன்னிங்சை துவங்குவார்கள். ஆனால் அஸ்வின் ஒரு பெரிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் என்கிற காரணத்தினால் அவரது திறமையை அறிந்த சர்ரே அணி முதல் ஓவரை வீச கொடுத்தது. அதன்படி தற்போது அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் அஷ்வின் முன்னணி வீரர் ஒருவரை க்ளீன் போல்ட் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ashwin

இந்த போட்டியில் அஷ்வின் முதல் ஓவரை வீசியதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 11 ஆண்டு கழித்து சாதனை ஒன்றினையும் படைத்துள்ளார். அதன்படி இதற்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்து வீச்சாளர் முதல் ஓவரை வீசியது 2010 ஆம் ஆண்டுதான். அதன்பிறகு தற்போது 11 ஆண்டுகள் கழித்து அஷ்வின் முதல் ஓவரை வீசியுள்ளார்.

Advertisement