தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியின் மூலம் மேலும் ஒரு விசித்திரமான சாதனைக்கு சொந்தக்காரரான – தமிழக வீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கிய ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தமிழக வீரரும், இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது போட்டியாக அமைந்தது. இதன் மூலம் 14-வது இந்திய வீரராக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரராக அஸ்வின் சாதனையை நிகழ்த்தினார்.

இந்த போட்டிக்கு முன்னதாக 99 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த ஐந்தாவது போட்டியின் முதல் இன்னிங்சிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

ஒருபுறம் இவரது பந்துவீச்சு சாதனைகள் அடுக்கடுக்காக இருந்து வரும் வேளையில் தற்போது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியதிலும் அவர் புதியதாக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 13 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். தற்போது 14-வது வீரராக இந்த பட்டியலில் இணைந்துள்ள அஸ்வின் இந்திய அணிக்காக அதிக வயதில் அதாவது தனது 37-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நூறாவது போட்டியில் விளையாடிய வீரர் என்ற விசித்திரமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இவருக்கு முன்னதாக இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனைவருமே 37 வயதிற்குள் நூறாவது போட்டியில் விளையாடியிருந்தனர். ஆனால் அஸ்வின் தான் தற்போது 37 வயதில் நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார்.

இதையும் படிங்க : 46 ரன்ஸ் லீடிங்.. இங்கிலாந்தை சவால் விடும் கில்.. சச்சினின் சாதனையை சமன் செய்த ஹிட்மேன் ரோஹித்

சர்வதேச அளவில் பாய்காட் 40 வயதில் தனது நூறாவது டெஸ்ட் போட்டியையும், லையாட் 39 வயதில் தனது நூறாவது டெஸ்ட் போட்டியையும், கிரகாம் கூச் (39), கிரீனிட்ச் (38), யூனிஸ்கான் (37) போன்றவர்களுக்கு அடுத்ததாக தற்போது அதிக வயதில் நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரராக அஸ்வின் சர்வதேச அளவில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement