ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியல். அஷ்வின் மற்றும் விராட் கோலி கண்டுள்ள முன்னேற்றம் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அப்போது நடைபெற்று முடியும் போட்டிகளின் முடிவில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு பின்னர் தற்போது புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பையும் இந்திய அணி உறுதி செய்துள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் அபாரமான பேட்டிங் மற்றும் பவுலிங்கை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் மூன்றாவது போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் முதலிடத்தை பகிர்ந்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த நான்காவது போட்டிக்கு பின்பு ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி மீண்டும் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இந்த தொடரில் மொத்தம் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு நான்காவது போட்டியில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் தற்போது 869 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

Ashwin

அவருக்கு அடுத்து 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோன்று இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தலான செயல்பட்ட அக்சர் பட்டேல் இந்த தொடரில் 264 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

அதோட பேட்டிங் தரவரிசையிலும் அவர் 44 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் 1 வீரராக ஜொலித்துக் கொண்டிருந்த விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்த வேளையில் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இல்லாமல் இருந்து வந்தார்.

இதையும் படிங்க : ஒரு நாள் முழுவதும் டிராவிட் மற்றும் லக்ஷமணன் அன்னைக்கு ஒரு மேஜிக்கே பண்ணிட்டாங்க – நினைவு கூர்ந்த ஹேமங் பதானி

இந்நிலையில் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை பதிவு செய்த விராட் கோலி மீண்டும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள வேளையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் தற்போது எட்டு இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement