தெ.ஆ ஒருநாள் தொடர் : 15 பேர் கொண்ட அணியில் தேர்வாகவுள்ள 2 சீனியர் வீரர்கள் – சூப்பர் செலக்சன்

Dekock
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடர் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

IND

மேலும் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியானது இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இரு சீனியர் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் தனது இடத்தை இழந்து இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஷிகர் தவான் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இடம்பிடித்த அஷ்வின் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கும் ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அது தவிர விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கும் இடம் கிடைப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரை தவறவிட்டு இருந்த வேளையில் தற்போது ஒருநாள் தொடருக்கான அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhawan

அவருடைய உடல் தகுதியும் தற்போது விளையாடும் அளவிற்கு தயாராக உள்ள நிலையில் அவர் தென்னாப்பிரிக்கா புறப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவரோடு சேர்ந்து அணியில் தேர்வாக இருக்கும் வீரர்களும் தென்னாபிரிக்க புறப்படுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த அணி இதோ :

இதையும் படிங்க : தோனி ரொம்ப கேஷுவலா அந்த முடிவை சொல்லிட்டாரு. எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்/ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல்

Advertisement