RR vs SRH : ஒரு ரன் அடித்த வீரருக்கு ஒரு அணியே பாராட்டுகளை தெரிவித்தது பற்றி தெரியுமா ?- விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ்

RR
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 45ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களையும், டேவிட் வார்னர் 37 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 48 ரன்களை அடித்தார். துவக்க வீரரான லிவிங்ஸ்டன் 44 ரன்களை அடித்தார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான ஆஷ்டன் டர்னர் 7 பந்துகளில் 3 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் சுவாரசியமான விடயம் என்ன என்றால் இவர் முதல் ரன்னை அடிக்கும்போது ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியும் இவரை பாராட்டியது. அதற்கு காரணம் இந்த வருடம் தனது முதல் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற டர்னர் பங்கேற்ற 3 போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். அதனால் அவர் இந்த போட்டியில் அடித்த முதல் ரன்னை அந்த அணி வீரர்கள் கொண்டாடினர்.

இதுபோன்ற சுவாரசியமான சம்பவம் இதுவரை நிகழ்ந்ததா என்று பார்த்தால் மிகவும் குறைவு தான். இன்னொரு சுவாரசியமான விடயம் டர்னர் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய அதிரடி வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement