தற்போதைய கிரிக்கெட்டில் பெஸ்ட் பினிஷர் இவர்தான். தோனி எல்லாம் போயாச்சு – ஆஸி வீரர் கருத்து

agar
- Advertisement -

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் 4 க்கு 1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்திருந்தாலும் 2க்கு 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரின்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் வீரரான ஆஷ்டன் ஆகர் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆண்ட்ரே ரசலை மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இருவரும் இருந்த அந்த சந்திப்பில் பேசிய ஆஷ்டன் அகர் :

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மிகச் சிறந்த வீரராக ரசல் திகழ்கிறார் என்றும் பலமுறை அவர் அந்த அணிக்காக மேட்ச் வின்னர் ஆக இருந்திருக்கிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் இக்கட்டான நிலையில் நம்பமுடியாத அளவிற்கு அதிரடியாக விளையாடி அந்த அணிக்கு வெற்றி பெற்று கொடுத்த ரசல் தான் உலகின் தலைசிறந்த பினிஷர் என்று கூறுவதில் எந்தவித தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரின் இந்த கருத்திற்கு பதிலளித்த ரசல் கூறுகையில் : நான் தொடர்ந்து இப்படி சிறப்பாக விளையாடுவதற்கு நான் எடுக்கும் பயிற்சிகள் தான் காரணம். போட்டி இருந்தாலும் இல்லையென்றாலும் தொடர்ச்சியான பயிற்சி எடுத்து வருகிறேன். அதன் காரணமாகவே என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது என்று குறிப்பிட்டார்.

russell 2

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வரும் ரசல் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக்குகளிலும் முக்கியமான வீரராக கலந்து கொண்டு தனது அதிரடி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement