- Advertisement -
உலக கிரிக்கெட்

எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு பிடித்த வீரர் என்றால் அது ஜடேஜா தான். ஜடேஜாவை புகழ்ந்து தள்ளிய – ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. பிறகு 197 ரன்கள் குவித்தார் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி அஷ்டன் அகர் பந்து வீச்சில் 89 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகர் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

இந்த போட்டிக்கு பிறகு பேசிய அவர் கூறியதாவது : தற்போது கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த வீரர் என்று நான் கருதுவது மேலும் ஆல்-ரவுண்டராக உருவாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது இந்திய அணியின் வீரரான ஜடேஜாவால் தான். அவருடன் இந்தியாவிற்கு எதிரான தொடரின் போது நீண்ட நேரம் பேசினேன். அருமையான உரையாடல் அது உலகிலேயே எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது ஜடேஜா தான். அவரை மாதிரியே கிரிக்கெட் ஆட விரும்புகிறேன்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் சிறந்தவராக அவர் திகழ்கிறார். பந்தினை அருமையாக சுழற்றுகிறார் மற்றும் அதேபோல் பேட்டிங்கிலும் நேர்மறையான சிந்தனையுடனும் விளையாடுகிறார். ஃபீல்டிங் பற்றி கூறவே தேவையில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த ஃபீல்டிங் என்று ஜடேஜாவை அஷ்டன் அகர் புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by