IND vs AUS : ஒரு மேட்ச் கூட விளையாடாமல் ஆஸ்திரேலிய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட வீரர் – அடப்பாவமே இதுவேறயா?

Nathan Lyon Pujara IND vs AUS
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

IND vs AUS

- Advertisement -

அதனைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் ஒன்றாம் தேதி இந்தூரிலும் கடைசி போட்டி மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா அணியில் தொடர்ச்சியாக வீரர்களின் வெளியேற்றமானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரில் மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் போன்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக இடம்பெறாமல் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Mitchell-Swepson

இவ்வேளையில் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பினார். அது தவிர்த்து டேவிட் வார்னரும் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ள வேளையில் தற்போது மேலும் அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடாத அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடர்களில் விளையாட இருப்பதால் அவர் அணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளார். இப்படி தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து வீரர்கள் வெளியேறி வருவது அந்த அணிக்கு பெரிய பின்னடையாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : 2 வீரர்கள் வெளியேறினாலும் கேப்டனுடன் இந்தியாவை மிரட்ட வரும் 2 தரமான நட்சத்திர ஆஸி வீரர்கள் – கம்பேக் நடக்குமா

அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இடம் பெற்றிருந்த மிட்சல் ஸ்வெப்சன் தனக்கு குழந்தை பிறக்க பிறந்துள்ள காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே அணியில் இருந்து விலகி நாடு திரும்பி இருந்தார். இந்நிலையில் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளது பெரிய பின்னடைவை தந்துள்ளது.

Advertisement