இவரு டி20 உலககோப்பையில் விளையாட வாய்ப்பில்லை. அவரை ஓரம் கட்டிட்டாங்க – ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தங்களது அணிகளை தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியும் அடுத்தடுத்து டி20 தொடர்களில் பங்கேற்று தற்போது விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடர்களின் அடிப்படையில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Avesh-Khan

- Advertisement -

மேலும் இந்திய அணியில் தற்போது சீனியர் வீரர்கள், இளம் வீரர்கள் என்று அனைவருக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு அதிலிருந்து பெஸ்ட் பிளேயேர்களை தேர்வு செய்து உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வார்கள் என்றும் தெரிகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் வீரர்களுக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரான முகமது ஷமி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இப்போதைக்கு முகமது ஷமி எதிர்வரும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. அவரது திறமைகளை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அவரை ஒரு சாதாரண வீரர் என்று நான் குறிப்பிடவில்லை.

shami

இருந்தாலும் அவர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிராக விளையாடிய பின்னர் இதுவரை டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவே இல்லை. அதோடு எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்று அங்கு விளையாட சென்றுள்ளதால் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தற்போது ஓரங்கட்டப்பட்டு உள்ளார் என்றே தெரிகிறது.

- Advertisement -

அவர் நிச்சயம் திறமை வாய்ந்த பவுலர் தான் அவர் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடா விட்டாலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையில் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார். இந்த ஆண்டு நமக்கு பெரிய அளவில் ஒருநாள் போட்டிகள் இல்லை. அதே போன்று ஐபிஎல் தொடரும் முடிந்துவிட்டதால் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமி விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : நான் இப்படி வளர தோனியின் அந்த வார்த்தைகளே காரணம். நான் கப் ஜெயிக்கவும் அதான் காரணம் – பாண்டியா பேட்டி

அதனைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இருந்து சத்தமில்லாமல் கழட்டிவிடப்பட்ட அவர் டி20 உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகம்தான் என்று தோன்றுவதாக ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement