சி.எஸ்.கே அணியின் வீரரான இவரது பேட்டிங் சயீத் அன்வரை நியாபகப்படுத்துகிறது – ஆசிஷ் நெஹ்ரா ஓபன்டாக்

Nehra-2
- Advertisement -

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், தொடரில் பங்கேற்றிருந்த சில வீரர்களுக்கும், அணி நிர்வாக ஊழியர்களுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டது. பயோ பபுளின் பாதுகாப்பு அம்சத்தை தாண்டியும் விளையாடும் வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதி ஆனதால், வீரர்களின் உடல் நிலை பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பாத பிசிசிஐ இத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இத்தொடரில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

CSK

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெஹ்ரா சி.எஸ்.கே அணியின் வீரரான மொயீன் அலியைப் பற்றி ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில்,

இத்தொடரில் அபாரமாக ஆடிய மொயீன் அலியின் அனைத்துப் போட்டிகளையும் நான் பார்த்தேன். அவர் விளையாடும் விதத்தை பார்த்தபோது எனக்கு பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சையத் அன்வர் தான் நினைவுக்கு வந்தார். ஏனெனில் மொயீன் அலியின் பேட்டிங்கில் சயீத் அன்வரின் சாயல் அப்படியே இருக்கிறது. மொயீன் அலி விளையாடும் போது மிகவும் ரிலாக்சாக விளையாடுகிறார். அவர் பேட்டிங் ஆடும்போது எந்தவிதமான அழுத்தத்தையும் உணராமல் அற்புதமாக ஆடுகிறார்.

moeen ali 2

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனி மொயீன் அலியை இத்தொடரில் மிகவும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும், என்று அவர் கூறினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஐபிஎல் ஏலத்தின் போது மொயீன் அலியை 7 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர் விளையாடும் இங்கிலாந்து அணிகூட செய்யாத ஒரு செயலை இந்த தொடரின் முதல் போட்டியிலேயே செய்தார் மகேந்திர சிங் தோனி.

moeen ali

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இத்தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொயீன் அலியை ஒன்டவுன் ஆர்டரில் விளையாட வைத்தார் தோனி. அந்தப் போட்டியில் 24 பந்துகளில் 36 ரன்களை அடித்த மொயீன் அலியை அதற்குப் பிறகான அனைத்துப் போட்டிகளிலும் ஒன்டவுன் பேட்ஸ்மேனாகவே களமிறக்கினார். இத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள மொயீன் அலி 157.25 ஸ்ரைக் ரேட்டுடன் 206 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement