தவறை ஏற்றுக்கொண்ட ஆஸி வீரர்களுக்கு இந்த தண்டனையே போதும்…சொல்லும் இந்திய வீரர் !

smith
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணிவீரர்கள் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐசிசியின் நடவடிக்கை குறித்து தனது கருத்தை பதிவுசெய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா. தற்போது தென்ஆப்பிரிக்க – ஆஸ்திரேலியா அணிகளிடையேயான டெஸ்ட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கேப்டவுனில் நடைபெற்று வந்தது.

smith

- Advertisement -

இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டாம் இன்னிங்ஸில் பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு அடிக்கடி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. பின்னர் அவர் ஆட்டத்தின் நடுநடுவே தன் பேன்டிற்குள் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை எடுத்து பந்தில் தேய்க்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.

பின்னர் இந்த புகார் நடுவர்களிடம் சென்றது. நடுவர்கள் விசாரித்த போது கேமரூன் பேன்கிராப்ட் முதலில் மறுத்தார். தான் கருப்பு துணி மட்டுமே வைத்திருந்ததாக கூறினார். பின்னர் மாலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் அணியிலுள்ள சில மூத்த வீரர்களின் ஆலோசனைப்படியே தான் அப்படி செய்ததாகவும் கூறினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய செயல் தனக்கும் தெரிந்தே நடந்தது எனவும் இனிமேல் அதுபோல நடக்காது எனவும் கூறினார்.

smith3

மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேமரூன் பேன்கிராப்ட்டிற்கு 75% அபராதமும், அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100% அபராதத்துடன் கூடிய ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கான தடையையும் விதித்தது.ஐசிசி ஒருபுறம் நடவடிக்கை எடுத்துவிட்ட போதிலும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மற்றும் பிரதமர் குடுத்த நெருக்கடிகளால் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவிகளிலிருந்து ஸ்மித் மற்றும் வார்னர் உடனடியாக நீக்கப்பட்டனர்.

- Advertisement -

மேலும் இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாகஐ எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து ஏற்கனவே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு பந்து வீச்சாளரான நெஹ்ரா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

நெஹ்ரா இதுகுறித்து பேசுகையில் “செய்த தவறை ஒப்புக்கொண்டதே தவறை உணர்ந்துவிட்டதாக அர்த்தம். ஏற்கனவே ஐசிசி ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கிவிட்டனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவிகளை பறித்துள்ளனர். இந்நிலையில் வாழ்நாள் தடையெல்லாம் மிகவும் மோசமான தண்டனையாக தான் நான் பார்க்கின்றேன். என்னை பொறுத்தவரையில் வாழ்நாள் தண்டனை தேவையற்றது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இது முதல்முறையல்ல என்று தெரிவித்துள்ளார்.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் எதிரொலியாக இன்று ஐபிஎல்-இல் ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஹானேவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement