
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார். எனவே 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அனுபவத்தை கொண்ட கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ராகுல் டிராவிட்டுக்குப் பின் விவிஎஸ் லக்ஷ்மன் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் முதல் வருடத்திலேயே பாண்டியா தலைமையில் கோப்பையை வெல்ல பயிற்சியாளராக நெஹ்ரா முக்கிய பங்காற்றினார். எனவே அவரை பயிற்சியாளராக கொண்டுவர பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் காணப்பட்டது.
மூட் இல்லை:
ஆனால் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 கோப்பையை வென்ற கம்பீர் 2024 சீசனில் ஆலோசகராக கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் கடைசி நேரத்தில் இந்தப் பக்கம் திரும்பிய பிசிசிஐ கம்பீரை புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பது பற்றி தாம் சிந்திக்கவில்லை என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 9 மாதங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வேலை செய்ய தமக்கு மூட் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதை தியாகம் செய்து விட்டு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் இந்தியாவை சிறப்பாக வழி நடத்துவார் என்றும் நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அது பற்றி நான் சிந்தித்ததில்லை. எனது குழந்தைகள் இன்னும் இளம் வயதிலேயே இருக்கின்றனர். கௌதம் கம்பீரின் குழந்தைகளும் இளம் வயதிலேயே இருக்கின்றனர். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனைகளை கொண்டிருப்பார்கள். நான் எனது இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பாக எனக்கு 9 மாதங்கள் பயணிக்கும் மூட் இல்லை. இந்திய அணியில் எப்போதும் சவால் இருக்கும். அதில் அசத்துவதற்கான வாய்ப்பும் இருக்கும்”
இதையும் படிங்க: அந்த 2 பேர் தான் என்னோட ரோல் மாடல்.. உ.கோ நேரத்துல கூட எனக்கு மெசேஜ் பண்ணாரு.. நிதிஷ் ரெட்டி வியப்பு
“ஐபிஎல் தொடரை விட இந்திய அணியில் வேலை செய்வது முற்றிலும் வித்தியாசமானது. கிரிக்கெட்டில் எப்போதும் ஆர்வத்தைக் கொண்டுள்ள கௌதம் கம்பீர் அனுபவம் கொண்டவர். ஒவ்வொரு பயிற்சியாளர்களும் வித்தியாசமாக சிந்திப்பார்கள். அந்த வகையில் மிகப்பெரிய அனுபவம் கொண்ட கம்பீர் இந்திய அணியில் வித்தியாசத்தை ஏற்படுத்துவார். அவர் நன்றாக செயல்படுவார் என்று நம்புகிறேன். ஒரு மனிதராக அவர் எப்போதும் மாற மாட்டார். அவரை நான் பல வருடங்களாக பார்த்து வருகிறேன்” என்று கூறினார்.