பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்தால் மட்டும் ஐ.பி.எல் தொடரை நடத்தமுடியும். ஐடியா கொடுத்த – ஆஷிஷ் நெஹ்ரா

Nehra-2
- Advertisement -

கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து இந்த தொடர் நடக்குமா ? இல்லை மீண்டும் தள்ளி வைக்கப்படுமா ? அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படுமா என்ற நிலைக்கு ஐ.பி.எல் தொடர் வந்துள்ளது.

Ipl cup

- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐபிஎல் தொடரும் அந்த தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு கரோனா வைரசின் தாக்கம் குறையுமா என்பது கேள்விக்குறிதான்?

அடுத்த சில மாதங்களுக்கு ஐபிஎல் தொடரை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது போலிருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது குறித்து தனது கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி நெஹ்ரா கூறுகையில் : ஐபிஎல் தொடரை ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நடத்த முடியாது ஏனெனில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அந்த மாதங்களில் மழை பெய்யும் என்பதால் பாதி போட்டிகள் நடத்த முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. இதனால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்படும்.

- Advertisement -

அதனால் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பை தொடருக்குப் பின்னர் ஐபிஎல் கோப்பையை நடத்தலாம் அவ்வாறு நடத்துவது சிறப்பாக இருக்கும். மேலும் வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றாலும் இந்திய வீரர்களை வைத்து குறைந்த அளவிலான போட்டியை வைத்து இந்த தொடரை நடத்த முடியும் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

CskvsMi

ஆனால் அவரின் இந்த ஐடியா பிசிசிஐக்கு சரியாக தெரியவில்லை. ஏனெனில் உலககோப்பைக்கு பிறகு ஐசிசி போட்டி அட்டவணைகளை வகுத்துள்ளது. அந்த அட்டவணையை பி.சி.சி.ஐ மாற்ற முடியாது என்ற காரணத்தினால் இந்த ஐபிஎல் தொடர் குறித்த இவரது யோசனை வீண் என்றே தோன்றுகிறது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரத்து ஆகவே அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement